மலையேற வரும் பயணிகளுக்கு உயிர் பயத்தை காட்டி ரூ.185 கோடி மோசடி
எவெரெஸ்ட் சிகரத்திற்கு மலையேற வரும் பயணிகளுக்கு உயிர் பயத்தை காட்டி ரூ.185 கோடி மோசடி நடைபெற்றது தெரியவந்துள்ளது.
எவெரெஸ்ட் காப்பீடு மோசடி
நேபாளத்தில் அமைந்துள்ள உலகின் உயரமான சிகரமான எவெரெஸ்ட் சிகரம், பிரபல சுற்றுலாத்தளமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏராளமானோர் மலையேற்றத்திற்காக வருகின்றனர்.

இப்படியாக மலையேற வருபவர்களை குறிவைத்து, சுற்றுலா வழிகாட்டிகள், தனியார் மருத்துவமனைகள், ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்கள் இணைந்து சுமார் ரூ.185 கோடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சுமார் 29,000 அடி உயரம் உள்ள எவெரெஸ்ட் சிகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வழங்கப்படும் உணவில் பேக்கிங் சோடா, மலமிளக்கி கலந்து கொடுத்துள்ளனர்.
இதனை உண்பதன் மூலம் அவர்களுக்கு வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும் போது, உடனிருக்கும் சுற்றுலா வழிகாட்டிகள், இது மருத்துவ அவசர நிலை என அவர்களிடம் பயத்தை தூண்டி, ஹெலிகாப்டர் மூலம் மட்டும் உடனடியாக சென்று மருத்துவ சிகிச்சை பெற முடியும் என மூளைச்சலவை செய்துள்ளனர்.

இவ்வாறாக ஒன்றுக்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து, ஓவ்வொருவறையையும் தனித்தனியாக அழைத்து வந்தது போல் விமான சேவை நிறுவனங்கள் காப்பீடு நிறுவனங்களிடம் பணத்தை பெற்றுள்ளன.
சில சுற்றுலா வழிகாட்டிகள், பயணிகளை உடல் நிலை சரியில்லாதது போல் போலியாக நடிக்க கூறி, ஹெலிகாப்டர் மூலம் கீழே அழைத்து வந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்றது போல் போலியான ரசீதை பெற்றுள்ளனர்.
இவ்வாறாக கடந்த சில ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட போலியான மீட்பு நடவடிக்கைகள் மூலம் காப்பீடு மோசடி நடைபெற்றது தெரியவந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பாக 32 பேர் மீது காவல்துறை குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அதில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகரித்து வரும் மோசடி சம்பவங்கள் காரணமாக, பல முக்கிய சர்வதேச காப்பீட்டு நிறுவனங்கள் சமீபத்தில் நேபாளத்தில் மலையேற்ற சுற்றுலாப் பயணிகளுக்கான காப்பீட்டை நிறுத்தியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |