உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்திய கோதுமை: உக்ரைன் நிலைகுறித்து ஐ.நாவில் கவலை!
ஆப்கானிஸ்தான், மியான்மர், சூடான் மற்றும் ஏமன் போன்ற நாடுகளுக்கு கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 1.8 மில்லியன் டன் கோதுமையை இந்தியா வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.
உலக அளவில் அதிகரித்து வரும் வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் உக்ரைன் போர் ஆகிய மனித மற்றும் இயற்கை காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளில் உணவுத் தானிய தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் உலகின் உணவுத் தானிய உற்பத்தியில் மிக முக்கிய நாடுகளில் ஒன்றான இந்தியா, உக்ரைன் மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதி மற்றும் உணவுத் தானியங்களை தொடர்ந்து இந்தியா வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஆப்கானிஸ்தான், மியான்மர் சூடான் மற்றும் ஏமன் போன்ற நாடுகளுக்கு 1.8 மில்லியன் டன் கோதுமையை இந்தியா ஏற்றுமதி செய்து இருப்பதாக ஐ.நாவுக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி ஆர்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்டை நாடான இலங்கையின் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய இந்தியா உதவுவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியா உர உற்பத்தியை அதிகரித்து, அதன் இருப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும், தேவைக்கு ஏற்றவாறு உலகளாவிய ஏரிபொருள் விநியோகத்தில் கிடைப்பதை உறுதிப்படுத்த இதே போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பாம்பு தீவில் இருந்து வெளியேறிய ரஷ்ய படை: உக்ரைனுக்கு குவியும் பாராட்டு!
நடந்து வரும் உக்ரைன் மோதலில் பொதுமக்கள் இறப்பு பற்றிய அறிக்கைகளுக்கு ஐ.நாவில் கவலை தெரிவித்த இந்தியா, நகர்ப்புறங்களில் உள்ள சிவிலியன் உள்கட்டமைப்புகள் ஆயுத மோதலில் எளிதான இலக்குகளாக மாறிவிட்டதாகவும், உக்ரைனின் நிலைமை தொடர்பாக இந்தியா ஆழ்ந்த கவலையையும் தெரிவித்ததுள்ளது.