இஸ்ரேல், பிரித்தானியா உட்பட 19 நாடுகள்: புதிய அபாயகரமான ஏவுகணையை வாங்க ஆர்வம்
அமெரிக்க இராணுவ பாதுகாப்பு விற்பனையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, பென்டகன் 19 நாடுகளுடன் 3.5 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
AIM-120 AMRAAM
அமெரிக்கா புதிதாக உருவாக்கியுள்ள AMRAAM என்ற எந்த காலநிலையிலும் பயன்படுத்தக் கூடிய ஏவுகணையை சொந்தமாக்கவே இஸ்ரேல், பிரித்தானியா, உக்ரைன் உட்பட 19 நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.
வெளியான தகவலின் அடிப்படையில் இதுவரை 19 நாடுகள் அமெரிக்காவின் இந்த AIM-120 AMRAAM ஏவுகணையை வாங்க முடிவு செய்துள்ளன. விநாடிக்கு 1,372 மைல்கள் வேகத்தில் செல்லக் கூடிய இந்த ஏவுகணையானது உலகின் சிறந்த ஏவுகணைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கடந்த மே மாதத்தில் 225 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டு AIM-120C-8 என்ற ஏவுகணையை அமெரிக்காவிடம் இருந்து துருக்கி வாங்கியது.
தற்போது AMRAAM ஏவுகணை தொடர்பில், 19 நாடுகள் முன்னெடுத்துள்ள இந்த 3.5 பில்லியன் டொலர் ஒப்பந்தம் என்பது இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தம் என்றே அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |