உக்ரைன் மீதான படையெடுப்பில் 19 ரஷ்ய ஜெனரல்கள் மரணம் - அதிர்ச்சி அறிக்கை
உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து ரஷ்யா 19 ஜெனரல்களை இழந்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது படையெடுப்பு
ரஷ்யா நான்கு ஆண்டுகளுக்கு முன் உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
Photo: UATV English/FB
இந்த நிலையில், சுமார் 19 ரஷ்ய ஜெனரல்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று புலனாய்வு ஊடகம் ஒன்று ரஷ்ய, உக்ரேனிய ஆதாரங்களில் இருந்து கிடைத்த அறிக்கைகளை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.
எனினும், இந்த மரணங்கள் அனைத்தும் ரஷ்ய அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
துப்பாக்கிச்சூடு அல்லது பீரங்கித் தாக்குதல்
2022யில் கொல்லப்பட்ட ஜெனரல்களில் ஆண்ட்ரே சுகோவெட்ஸ்கி, ஓலெக் மித்யாயெவ், விளாடிமிர் ஃப்ரோலோவ், ஆண்ட்ரே சைமனோவ், கனமத் பொட்டாஷெவ் மற்றும் ரோமன் குடுசோவ் ஆகியோர் அடங்குவர்.
முன்னணிப் பகுதிகளுக்கு அருகிலும், போர் மண்டலங்களிலிருந்து சற்று தொலைவிலும், கட்டளை மையங்கள் மீதான தாக்குதல்கள், விமான விபத்துகள், குண்டுவெடிப்புகள் மற்றும் சந்தேகிக்கப்படும் நாசவேலை நடவடிக்கைள் உட்பட பல சம்பவங்களில் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், போரின் ஆரம்ப கட்டங்களில் பல ஜெனரல்கள் துப்பாக்கிச்சூடு அல்லது பீரங்கித் தாக்குதல்களால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Photo: Majdankrd/Telegram
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |