மறுநாள் திருமணம்: தீ விபத்தில் சிக்கி மணப்பெண் மரணம்
அமெரிக்காவில் திருமணத்திற்கு முந்தைய நாள் வீட்டில் தீப்பிடித்ததில் மணப்பெண் திருமணத்தன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விஸ்கான்சினில் பைஜ் ரூடி எனும் 19 வயது பெண் வீட்டில் தீப்பிடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மே 23 (செவ்வாய்கிழமை) அன்று அதிகாலை 4 மணியளவில் ரீட்ஸ்பர்க் வீட்டின் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த பைஜ் ரூடி (Paige Ruddy), புகையை சுவாசித்ததால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அடுத்த நாள் மருத்துவமனையில் இறந்தார்.
Marcus Aarsvold/FB
விபத்து நடந்த முந்தைய நாள் (திங்களன்று) தான் அவர் தனது வருங்கால கணவனான லோகன் மிட்செல்-கார்டருடன் (Logan Mitchell-Carter) திருமண நிச்சயம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மறுநாள் சவுக் கவுண்டி கோர்ட்ஹவுஸில் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் முன்னிலையில் திருமண விழாவைத் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த வீடு, மணமகனின் தாத்தா பாட்டிக்கு சொந்தமானது மற்றும் அங்கு புகை கண்டறியும் கருவிகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
Marcus Aarsvold/FB
முதற்கட்ட விசாரணையில் பைஜ் ரூடியின் மரணத்திற்கு புகையை சுவாசித்ததே காரணம் என்று காட்டுகிறது. தீவிபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது, ஆனால் எந்த முறைகேடும் இதில் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 4 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வீட்டில் இருந்த மற்ற 3 பேர் தப்பிக்க முடிந்ததாக கூறப்படுகிறது.
பைஜ் ரூடியின் இறுதிச்சடங்கு அடுத்த வாரம் நடைபெறும். இதற்கிடையில், குடும்பம் அவரது மருத்துவ மற்றும் இறுதிச் செலவுகளை ஈடுகட்ட அர்ப்பணிக்கப்பட்ட GoFundMe ஒன்றை அமைத்துள்ளது .
Paige Ruddy: GoFundMe
ரூடி ஜூன் 2022-ல் ரீட்ஸ்பர்க் ஏரியா உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றதாகவும், இந்த இலையுதிர்காலத்தில் மேடிசன் ஏரியா தொழில்நுட்பக் கல்லூரியில் வெட் டெக் திட்டத்தில் சேரத் திட்டமிட்டுள்ளதாகவும் ரூடியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.