ஈரானில் கர்ப்பிணிப்பெண் மர்ம மரணம்: விசாரணையில் தெரியவந்த திடுக் தகவல்
A 19-year-old pregnant woman has been killed by her parents in an alleged honour killing in Iran: ஈரானில், கர்ப்பிணிப்பெண்ணொருவர் அவரது பெற்றோரால் கொல்லப்பட்ட நிலையில், அது கௌரவக் கொலை என தெரியவந்துள்ளது.
ஈரானில், 19 வயதேயுடைய ஒரு இளம்பெண் உயிரிழந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பொலிஸ் விசாரணையில், அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கர்ப்பிணிப்பெண் மர்ம மரணம்
ஈரானிலுள்ள Sanandaj என்னுமிடத்தில், ஹெலியா (Helia Fattahi) என்னும் இளம்பெண் உயிரிழந்ததாக தகவல் கிடைக்கவே, விசாரணைக்காக பொலிசார் அங்கு சென்றுள்ளனர்.

பின்னர், குடும்பத் தகராறில் ஹெலியா கொல்லப்பட்டதாக தெரிவித்த பொலிசார், அவரது பெற்றோரை கைது செய்தனர்.
இதற்கிடையில், சில மனித உரிமை அமைப்புகள் ஹெலியாவின் மரணம் தொடர்பில் அதிரவைக்கும் சில தகவல்களை வெளியிட்டுள்ளன.
அதாவது, ஹெலியாவின் வயது 19 என பொலிசார் கூற, அவரது உண்மையான வயது 16 என மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
அத்துடன், ஹெலியா இளைஞர் ஒருவருடன் நெருங்கிப் பழகிவந்ததாகவும், அதனால் அவர் கர்ப்பமுற்றதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தான் கர்ப்பமாக உள்ளது குறித்து தன் பெற்றோரிடம் ஹெலியா கூற, ஆத்திரமடைந்த அவர்கள் ஹெலியாவை தாக்கி, தலையணையை அவரது முகத்தில் அழுத்திக் கொன்றுவிட்டதாகவும் அந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.