கடலில் மூழ்கிய 19 வயது கயாக்கிங் வீரர்: பிரித்தானிய கடற்கரையில் சடலமாக மீட்பு
பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்ட் கடற்கரையில் காணாமல் போன 19 வயது இளைஞரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
கயாக்கிங் வீரர் உடல் மீட்பு
நார்தம்பர்லேண்ட் கடற்கரையில் கயாக்கிங் சென்றபோது விபத்தில் சிக்கி 19 வயது மைக்கேல் ஹென்றி என்ற இளைஞர் காணாமல் போனார்.
பவுல்மர்(Boulmer) பகுதிக்கு அருகே ஜூலை 7ம் திகதி மாலை மைக்கேல் ஹென்றி சென்ற இரண்டு பேர் கொண்ட படகு கவிழ்ந்ததை அடுத்து காணாமல் போனார்.
இதில், மைக்கேல் ஹென்றியுடன் பயணம் செய்த மற்றொரு வீரர் அதிர்ஷ்டவசமாக கடலில் தத்தளித்த நிலையில் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டார்.

ஆனால் மைக்கேல் ஹென்றியை மீட்க முடியவில்லை. இதையடுத்து அவரை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையானது பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடந்த ஜூலை 26ம் திகதி பிளைத் கடற்கரையில் ஹென்றியின் உடல் கண்டுடெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும் முறையான அடையாளம் காணும் பணி நிறைவடைந்ததை அடுத்து, இது தொடர்பான அறிக்கை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஹென்றியின் மறைவை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஹென்றியின் அழகான நினைவுகளை உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் ஹென்றியை கண்டுபிடிக்க அயராது உழைத்த அவசரகால சேவைகளுக்கும், மீட்பு பணியாளர்களுக்கும் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |