உலகின் மிகப்பெரிய தண்ணீர் திருவிழா - விபத்தில் சிக்கி 191 பேர் உயிரிழப்பு
தாய்லாந்தின் தண்ணீர் திருவிழாவிற்கு செல்லும் போது விபத்தில் சிக்கி 191 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்து தண்ணீர் திருவிழா
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டு கொண்டாடுவது போல் தாய்லாந்திலும் ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
சோங்கிரான் திருவிழா என தாய்லாந்தில் இந்த புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் தாய்லாந்து மக்கள் பௌத்த கோவிலுக்கு சென்று வழிபடுவது போல், ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் ஊற்றி விளையாடும் உலகின் மிகப்பெரிய தண்ணீர் திருவிழா நடைபெறுகிறது. இது கடந்த கால பாவங்களை கழுவி புத்தாண்டை வரவேற்பதை குறிக்கிறது.
ஏப்ரல் 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு இந்த திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்ள பாங்காங் போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.
191 பேர் உயிரிழப்பு
இவ்வாறாக சொந்த ஊருக்கு செல்லும் பயணத்தில், 951-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டதாகவும், அதில் 191 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட 42 சதவீதம் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாலும், 27.4 சதவீத விபத்துகளுக்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது காரணமாக அமைந்துள்ளது. இதில், அதிகப்படியான விபத்துகள் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இது போல் விபத்துகள் ஏற்படுவதால், இந்த திருவிழா காலத்தை 7 அபாயகரமான நாட்கள் என கூறுகின்றனர்.
அதேவேளையில், இந்த பண்டிகையை காண சுமார் 5 லட்சம் சர்வதேச சுற்றுலா பயணிகள் வருவார்கள் எனவும், 940 மில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் எனவும் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |