தோழியின் 48 வயது தந்தையை காதலிக்கும் 19 வயது பெண்! ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து வாழ முடியாது என உருக்கம்.. காதல் மலர்ந்தது எப்படி?
19 வயதான இளம்பெண்ணும், 48 வயதான நபரும் உயிருக்கு உயிராக காதலிக்கும் நிலையில் பெண்ணின் குடும்பத்தார் தொடர்ந்து அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவை சேர்ந்தவர் நடாலி நோபிள் (19). இவரும் பாபி லிண்ட்சே (48) என்பவரும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். இருவரின் காதல் கதை மிக சுவாரசியமானது.
இது குறித்து நடாலி கூறுகையில், கடந்த 2015ல் டென்னிஸ் பயிற்சியாளரான பாபியிடம் பயிற்சியில் சேர்ந்தேன்.
அங்கு தான் என் வயதுடைய பாபியின் மகளும் தந்தையிடம் பயிற்சி பெற்று வந்தார்.
நாங்கள் இருவரும் நட்பானோம், அதே சமயம் பாபியும் நானும் பயிற்சியாளர், மாணவி என்ற நிலையிலேயே பழகினோம். ஆனால் இதன் பின்னர் எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு பாபியுடன் டேட்டிங் சென்றேன், இருவரும் தற்போது உயிருக்கு உயிராக காதலிக்கிறோம்.
ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து வாழ முடியாத நிலையில் உள்ளோம். ஆனால் எங்கள் இருவருக்குள் உள்ள வயது வித்தியாசத்தால் காதலை என் பெற்றோர் தொடர்ந்து எதிர்க்கின்றனர்.
ஆனால் பாபியால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என உணர்ந்துள்ளனர். ஒருநாள் எங்கள் காதலை அவர்கள் ஏற்று கொள்வார்கள் என நம்புகிறேன்.
அதே போல பாபியின் மகள்களும் எங்களை பார்த்து மகிழ்ச்சியடையவில்லை.
எப்படியிருந்தாலும் அவர்களின் எதிர்ப்பு எங்களை மேலும் நெருக்கமானவர்களாகவே மாற்றுகிறது என கூறியுள்ளார்.

