இன்று முதல் 1 ரூபாயில் சென்னை மெட்ரோ, பேருந்து, ரயில் பயணம் - Chennaione செயலியில் சலுகை
வெறும் 1ரூபாயில் சென்னை மெட்ரோ, பேருந்து, ரயில் பயணம் செய்யும் சலுகை இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
Chennai One செயலி
சென்னையில் தினமும், லட்சக்கணக்கான மக்கள், பயணம் செய்வதற்கு மாநகர பேருந்து, ரயில், மெட்ரோ ஆகிய பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் ஆகிய அனைத்து போக்குவரத்தையும் ஒரே QR பயணச் சீட்டு மூலம் ஒருங்கிணைக்கும் சென்னை ஒன்று(Chennai One) செயலியை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த செயலியை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், இதன் மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு 1 ரூபாயில் டிக்கெட் வழங்கும் சலுகையை சென்னை ஒருங்கிணைந்த மாநகரப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
1 ரூபாய் பயணம்
நவம்பர் 13 ஆம் திகதி முதல் குறிப்பிட்ட காலத்திற்கு இந்த சலுகை அமுலில் இருக்கும்.
இந்த குறிப்பிட்ட காலத்தில் ஒருமுறை மட்டும் ரூ.1 க்கு இதன் மூலம் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
Vanakkam Chennai! Your 'Oru Rooba Ticket' has arrived! 🎉
— Chennai One (@Chennai_One) November 13, 2025
Book your Bus, Metro, or Suburban Train tickets for just ₹1 through the #ChennaiOne app 🚀
👉 Choose your preferred choice of commute
👉 Pay via @NPCI_BHIM Payments App or @navifinance UPI
👉 Get your instant discount… pic.twitter.com/xAzCW9KkEh
இந்த சலுகையை பெற BHIM payments அல்லது navi UPI மூலம் பணம் செலுத்த வேண்டும்.
மேலும், Chennai One செயலி மூலம், MTC பேரூந்துகளுக்கான மாதாந்திர பாஸ் பெற்றுக்கொள்ளும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதில், ரூ.1,000 மற்றும் ரூ.2,000(ஏசி பேருந்துகளிலும் பயணிக்கலாம்) என இரு வகையான பாஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |