அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை, அடுத்த மாதம் 9ம் திகதி ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறித்த சந்திப்பின்போது இருதரப்பு நட்புறவை வலுப்படுத்த
வும், இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் சுதந்திரமாக கடந்து செல்வதையும் இரு தலைவர்களும் ஒப்புக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் பிரதமர் சுகா ஏப்ரல் மத்தியில் 3 நாள் பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளதாக தலைமை கேபினட் செயலாளர் கூறி உள்ளார்.
இதன்மூலம், ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் என்ற சிறப்பை சுகா பெறுவார்.
இதேபோல் 2016ல் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருந்த போதும், முதல் வெளிநாட்டு தலைவராக ஜப்பானின் அப்போதைய பிரதமர் ஷின்சோ அபே சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.