ENG vs WI: முதல் டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
லார்ட்ஸில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனின் கேரியரின் கடைசி போட்டியும் இதுதான் என்பதால் அவருக்கு பிரமாண்டமான பிரியாவிடை கிடைத்தது.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இங்கிலாந்து அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி ஜூலை 10-ஆம் திகதி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.
போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதனால், முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மிகவும் சுமாராக விளையாடி 121 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி சார்பில் அறிமுக வீரர் கஸ் அட்கின்ஷன் 7 விக்கெட்ட்டுகள் எடுத்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 371 ஓட்டங்கள் குவித்தது.
ஆட்டத்தின் மூன்றாவது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்றைய ஸ்கோரான 79 ஓட்டங்களுடன் விளையாடத் தொடங்கியது. ஒட்டுமொத்த அணியும் 136 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதைத்தொடர்ந்து 250 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 136 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டாகி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
அறிமுக வீரர் கஸ் அட்கின்சன் சாதனை
போட்டியின் நாயகனாக லார்ட்ஸ் டெஸ்டில் அறிமுக வீரரான கஸ் அட்கின்சன் தெரிவானார். இந்தப் போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்துக்காக 134 வருடங்கள் கழித்து அறிமுகப் போட்டியிலேயே 12 விக்கெட்டுகள் எடுத்து 3வது சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
பிரியாவிடை பெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன்
இந்த பிரம்மாண்ட வெற்றியுடன் இங்கிலாந்து ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றார்.
2002-இல் அறிமுகமாகி 21 வருடங்களாக உலகின் அனைத்து டாப் பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்த அவர் 704 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற யாராலும் நெருங்க முடியாத உலக சாதனையுடன் அவர் விடை பெறுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
England vs West Indies 1st Test result, James Anderson, eng vs wi test