முதல்முறையாக வெளிநாடொன்றுக்கு இந்திய ஏவுதளங்களை பயன்படுத்த அனுமதி
first time india allows missile test range for Japan; ஜப்பானுக்கு இந்தியா தனது ஏவுதளங்களை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய ஏவுதளங்களை பயன்படுத்த ஜப்பானுக்கு அனுமதி
கடந்த நவம்பர் 19 அன்று, டோக்கியோவில் நடைபெறும் நான்காவது இந்தியா-ஜப்பான் 2+2 வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், சிக்கலான கூட்டு இராணுவப் பயிற்சிகளை முன்னெடுப்பது, இராணுவப் பயிற்சிகளில் ஆளில்லா தொழில்நுட்பங்களை மேலும் ஒருங்கிணைப்பது, கடற்படைக் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து அகற்றும் திறன்களை மேம்படுத்துவது, தகவல் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்புக்கொண்டன.
மேலும், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கும் (DRDO) ஜப்பானின் கொள்முதல், தொழில்நுட்பம் மற்றும் தளவாட முகமைக்கும் (ATLA) இடையே பாதுகாப்பு ஆராய்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதில் முக்கியமாக இந்திய துப்பாக்கிச் சுடும் தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தப்படி, ஜப்பான் ராணுவம் நேரடி இராணுவத் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிக்காக இந்தியத் துப்பாக்கிச் சுடும் தளங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதில், சுமார் 1,000 கி.மீ வரம்பு கொண்ட அடுத்த தலைமுறை கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான Type-25 போன்ற தரை-கப்பல் ஏவுகணைகளைப் பயன்படுத்தும் சோதனைகளும் அடங்கும்.
ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தை (ITR) ஜப்பான் தனது ஏவுகணைத் திட்டத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
இதன் மூலம், இந்தியா முதன்முறையாக தனது மிகவும் மதிப்புமிக்க ஏவுகணை சோதனை மையத்தை ஒரு வெளிநாட்டுக்கு திறந்துவிட உள்ளது.
மேலும், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் அமையவிருக்கும் இரண்டு அதிநவீன பரிசோதனை மையங்களையும் ஜப்பான் பயன்படுத்திக்கொள்ள இந்தியா அனுமதிக்கத் தயாராக உள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறியதாக Firstpost தெரிவித்துள்ளது.
ஜப்பான் தனது வரையறுக்கப்பட்ட பயிற்சி இடத்தின் காரணமாக, குறிப்பிட்ட சில நீண்ட தூர ஏவுகணைப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது புவியியல் ரீதியான வரம்புகளை எதிர்கொள்கிறது.
இந்தியா, தனது பரந்த புவியியல் பரப்பு மற்றும் நன்கு நிறுவப்பட்ட பாதுகாப்பு சோதனை உள்கட்டமைப்புடன், இதுபோன்ற இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான வசதிகளை வழங்க முடியும்.