முதல் முறையாக இந்திய ராணுவத்தில் 5 பெண் அதிகாரி நியமனம்
முதல் முறையாக இந்திய ராணுவம் 5 பெண் அதிகாரிகளை பீரங்கி படையில் சேர்த்துள்ளது.
5 பெண் அதிகாரி நியமனம்
ஆயுதப் படைகளில் பெண்களின் பங்கை விரிவுபடுத்துவதற்கான இந்திய இராணுவம் முதல்முறையாக “5 பெண் அதிகாரிகளை” பீரங்கி படையில் இன்று இணைத்தது.
இந்த பெண் அதிகாரிகள் சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA) வெற்றிகரமாக பயிற்சியை முடித்த பிறகு இன்று பீரங்கி படையில் சேர்ந்தனர்.
லெப்டினன்ட் மெஹக் சைனி, லெப்டினன்ட் சாக்ஷி துபே, லெப்டினன்ட் அதிதி யாதவ், லெப்டினன்ட் ரேகா சிங் மற்றும் லெப்டினன்ட் பயஸ் முட்கில் ஆகியோர் இந்த பெருமைக்குரிய பெண் அதிகாரிகளாக உள்ளனர்.
அவர்களில், 3 பேர் சீனாவுடனான எல்லையில் நிலைநிறுத்தப்பட்ட பிரிவுகளுக்கும், மற்ற இருவர் பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகிலுள்ள "சவாலான இடங்களில்" அனுப்பப்பட்டுள்ளனர்.
ஜனவரி மாதம், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பெண் அதிகாரிகளை பீரங்கி பிரிவுகளில் நியமிக்கும் முடிவை அறிவித்தார். இதற்கு பின்னர் மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
First batch of five women officers commissioned into Regiment of Artillery of the Indian Army pic.twitter.com/qhLcMyDR5m
— Dinakar Peri (@dperi84) April 29, 2023
Lt Gen AK Singh, #GOC-in-C #SouthernCommand interacted with the first batch of 5 Lady Cadets commissioned in Regiment of Artillery. He felicitated and motivated them. A new era of hope and pursuit for excellence #NariShakti pic.twitter.com/awF62KwqbW
— Southern Command INDIAN ARMY (@IaSouthern) April 29, 2023