யுரேனியம் செறிவூட்டல் வசதிகளை பார்வையிட்ட கிம் ஜாங் உன்: முதல் படத்தை வெளியிட்ட வட கொரியா
வட கொரியா முதல் முறையாக யுரேனியம் செறிவூட்டல் வசதிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
யுரேனியம் செறிவூட்டல் வசதிகள்
வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டல் வசதிகளை ஜனாதிபதி கிம் ஜாங் உன் சுற்றுப்பயணம் செய்து பார்வையிடும் முதல் புகைப்படத்தை அந்த நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
இந்த பார்வையிடலானது, நாட்டின் அணு ஆயுத களஞ்சியத்தை அதிகரிப்பதற்காக கூடுதல் மையவிலக்குகளுக்கு(centrifuges) நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்ததை அடுத்து நடந்துள்ளது.
North Korea publicly disclosed a uranium enrichment facility for the first time, marking a significant development in its nuclear program.
— Clash Report (@clashreport) September 12, 2024
— Historically, North Korea's nuclear ambitions began in the 1950s.
— North Korea is estimated to possess around 50 nuclear warheads as of… pic.twitter.com/k92S7lOyxN
தடை செய்யப்பட்ட ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடையை வட கொரியா எதிர்கொண்டு வருகிறது.
இருப்பினும் 2006ம் ஆண்டு வடகொரியா மேற்கொண்ட முதல் அணு ஆயுத சோதனையில் இருந்து இதுவரை அதன் யுரேனியம் செறிவூட்டல் வசதிகளை பகிரங்கமாக வெளியிட்டது இல்லை.
KCNA ஊடக அறிக்கை
நாட்டின் அரசு ஊடகமான KCNA அறிக்கையில், கிம் அணு ஆயுத நிறுவனம் மற்றும் ஆயுத-தர அணுசக்தி உற்பத்தி தளத்தை கிம் பார்வையிட்டதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
KCNA
இருப்பினும் இந்த வசதிகள் எங்கு அமைந்துள்ளது என்பது குறித்து தெளிவான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
Yongbyon அணுசக்தி தளம் உள்பட பல்வேறு யுரேனியம் செறிவூட்டும் வசதிகளை வடகொரியா நிர்வகித்து வருவதாக நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |