உக்ரைனில் பொதுமக்களை கொன்று குவிக்கும் ரஷ்யா!
உக்ரைன் மீது ரஷ்ய தொடுத்து வரும் போரில் இதுவரை 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அவசர சேவை அதிகாரிப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 7வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா படைகள், குடியிருப்பு பகுதிகளில் சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த 6 நாட்களில் கிட்டத்தட்ட 6,000 ரஷ்ய வீரர்களைக் கொன்றுள்ளதாக உக்ரைனிய தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த மோதலில் இதுவரை 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரேனிய அவசர சேவை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மணிநேரத்திற்கு குழந்தைகள், பெண்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உயிரிழந்து வருவதாக அவசர சேவை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து வசதிகள், மருத்துவமனைகள், மழலையர் பள்ளிகள் மற்றும் வீடுகள் உட்பட நூற்றுக்கணக்கான கட்டமைப்புகளை ரஷ்ய படைகள் அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.