பிரான்சிலிருந்து அயர்லாந்துக்கு வந்த பார்சலிலிருந்த போதைப்பொருள்
பிரான்சிலிருந்து அயர்லாந்துக்கு வந்த படகொன்றிலிருந்த பார்சலில், பெரும் அளவிலான போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
பார்சலிலிருந்த போதைப்பொருள்
நேற்று, பிரான்சின் Dunkirkஇலிருந்து அயர்லாந்தின் Wexford நகருக்கு படகொன்று வந்த நிலையில், அதை வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளார்கள்.

அப்போது, ஒரு பார்சலில் போதைப்பொருள் ஒன்று மறைத்துவைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
145 கிலோ எடைகொண்ட ஒரு வகை போதைப்பொருளும், 7.9 கிலோ எடைகொண்ட அதே போதைப்பொருளின் மற்றொரு வடிவமும் அந்த பார்சலில் இருந்துள்ளது.
அந்த போதைப்பொருளின் மதிப்பு 2.5 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.
இந்த விடயம் தொடர்பில் 20 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |