Access 125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் Suzuki., காரணம்..?
முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான Suzuki Motorcycle India, அதன் பிரபலமான Access 125 ஸ்கூட்டர்களின் 2.64 லட்சம் யூனிட்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
ஸ்கூட்டரில் உள்ள high tension cord தொடர்பான தொழில்நுட்பக் கோளாறு காரணமாக Access 125 ஸ்கூட்டர்கள் திரும்பப் பெறப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 3, 2022 வரை தயாரிக்கப்பட்ட 2,63,788 யூனிட் சுஸுகி அக்சஸ் 125 தற்போது நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும்.
ஹோண்டா ஆக்டிவா 125, TVS Jupiter 125 மற்றும் Hero Destiny 125 ஸ்கூட்டர்களுடன் Suzuki Access 125 போட்டியிடுகிறது.
Suzuki Access 125 ஸ்கூட்டர்கள் தவிர, 52,578 Suzuki Avenis ஸ்கூட்டர்களும், 72,045 Suzuki Burgman ஸ்கூட்டர்களும் இதே பிரச்சினையில் திரும்பப் பெறப்படுவதாக Suzuki Motorcycles India தெரிவித்துள்ளது.
மொத்தம் 3,88,411 யூனிட் சுஸுகி அக்சஸ் 125, சுஸுகி அவெனிஸ் மற்றும் சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர்கள் திரும்பப் பெறப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Suzuki Motorcycle India, Suzuki Access 125