இந்தியாவின் முதல் பிரீமியம் மின்சார ஸ்கூட்டரை வெளியிட்ட BMW
BMW Motorrad India இன்று (ஜூலை 24) இந்திய சந்தையில் சூப்பர் பிரீமியம் மின்சார ஸ்கூட்டர் BMW CE 04-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவே நிறுவனத்தின் முதல் மற்றும் இந்தியாவின் முதல் பிரீமியம் மின்சார இரு சக்கர வாகனமாகும்.
இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜே செய்தால் 130 கிலோமீட்டர்கள் பயணிக்கலாம் என நிறுவனம் கூறுகிறது.
BMW நிறுவனம் இ-ஸ்கூட்டரின் விலையை ரூ.14.90 லட்சமாக நிர்ணயம் செய்துள்ளது.
இதனால், BMW CE 04 இந்தியாவின் விலையுயர்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டராகவும் மாறியுள்ளது.
இது Tata-வின் Nexon EV SUV-வியின் விலையை விட அதிகமாகும். Tata Nexon EV-யின் ஆரம்ப விலை ரூ.14.49 லட்சம் ஆகும்.
BMW CE 04 பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் டெலிவரி செப்டம்பர் 2024 முதல் தொடங்கும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.
BMW இந்த மின்சார ஸ்கூட்டருடன் மூன்று ஆண்டுகள் மற்றும் வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கான Standard warranty வழங்குகிறது. இது நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.
கூடுதலாக, 24x7 365 நாட்களுக்கும் road-side assistance வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
BMW Motorrad India, BMW CE 04, India's first super premium electric scooter BMW CE 04