மாஸ்கோவில் பச்சிளம் குழந்தை மரணம்: உக்ரைனின் கோர தாக்குதல்
ரஷ்யா முழுவதும் உக்ரைன் நடத்திய தாக்குதலில் குழந்தை உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
12 நகரங்களை குறிவைத்து
ரஷ்ய தலைநகரின் தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் உள்ள 12 நகரங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டதாகவும், அதில் ஒரு பச்சிளம் குழந்தையும் அடங்கும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரே வொரோபியோவ் கூறுகையில், "யெகோரியெவ்ஸ்கில் கீழே விழுந்த் ஓவர் ட்ரோன் விமானம் தீயை மூட்டியதுடன், ஒரு வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் மக்களை சிக்க வைத்தது. முதலுதவிப் பணியாளர்கள் இடிபாடுகளில் இருந்து இரண்டு பெரியவர்களையும், இரண்டு குழந்தைகளையும் விரைவாக மீட்டனர். துரதிர்ஷ்டவசமாக, ஆறு மாதக் குழந்தை ஒன்று மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தது" என்றார்.
419 உக்ரேனிய ட்ரோன்கள்
அத்துடன் பகுதியளவு இடிந்து விழுந்த வீட்டில் இருந்து புகை வெளியேறுவதைக் காட்டும் சம்பவ இடத்தின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார்.
மேயர் செர்ஜி சோபியாவின், நகரை நோக்கி வந்த டசின் கணக்கான உக்ரேனிய ட்ரோன் விமானங்களை வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக கூறினார்.
இதற்கிடையில், ரஷ்யா முழுவதும் மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியாவில் 419 உக்ரேனிய ட்ரோன்களை இடைமறித்ததாக, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |