அரியானாவில் பீரங்கி பயிற்சியில் நிகழ்ந்த சோகம்: 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
2 army soldiers killed in artillery shell training: அரியானாவில் பீரங்கி மோதிய விபத்தில் 2 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
அரியானா மாநிலம் ஹிசார் அருகே உள்ள போஜ்ராஜ் கிராமத்தில் 32 பீரங்கிகளை இயக்கி ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
பயிற்சியின் போது உருவான புழுதியால் பீரங்கியை இயக்கிய வீரர்களுக்கு முன்னால் நின்றிருந்தவர்கள் யாரும் பார்வைக்கு தெரியவில்லை.
இதனால் பீரங்கி பயிற்சி களத்தில் நின்றிருந்த வீரர்கள் மீது பீரங்கி ஏறியது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு வீரர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லியை சேர்ந்த நாயக் மணிஷ் குமார் மற்றும் புடான் பகுதியைச் சேர்ந்த நாயக் அங்குஷ் குமார் ஆகியோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில், அவர்களின் உடல் தேசியக் கொடி போர்த்தப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.