நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சடலங்களில் நகைகளை திருடிய இளைஞர்கள்

Nepal Flood
By Karthikraja Aug 28, 2026 06:32 AM GMT
Report

man stealing ear rings from dead nepal flood victims: நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சடலத்தில் இருந்து நகைகளை திருடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் உயிரிழந்த சடலங்களில் நகை திருட்டு

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. 1,468 பேர் மாயமாகியுள்ளனர். 

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சடலங்களில் நகைகளை திருடிய இளைஞர்கள் | 2 Arrested For Steal Earring Nepal Flood Victims

நேபாள காவல்துறை மற்றும் ராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு மக்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாயமாகியுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளத்தில் உயிரிழந்து நாராயணி ஆற்றில் கரை ஒதுங்கிய சடலத்தின் காதுகளில் இருந்த தங்க காதணிகளை 2 இளைஞர்கள் அகற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

இதனைத்தொடர்ந்து, பரத்பூர் மாநகராட்சி-1 இல் உள்ள பொக்காரா பேருந்து நிலையம் அருகே அந்த வீடியோவில் இருந்த நபர்களான 25 வயதான மதன் குருங் மற்றும் 38 வயதான உமேஷ் சௌத்ரி ஆகியோரை நேபாள காவல்துறை அடையாளம் கண்டு கைது செய்தது. 

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சடலங்களில் நகைகளை திருடிய இளைஞர்கள் | 2 Arrested For Steal Earring Nepal Flood Victims

இந்த மாதிரியான இக்கட்டான நேரத்தில் உயிரிழந்தவர்களை குறிவைத்து நடைபெறும் கொள்ளை அல்லது வேறு எந்த மனிதாபிமானமற்ற செயலையும் பொறுத்துக்கொள்ள முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது. 

சீன நாட்காட்டியால் மாறிய பயணத்திட்டம் - நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்

சீன நாட்காட்டியால் மாறிய பயணத்திட்டம் - நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்

நேபாளம் சந்தித்த மிக மோசமான வெள்ளப் பேரழிவுகளில் ஒன்றாக இது கருதப்படும் நிலையில், சேதமடைந்த சாலைகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள், மலைபோல் குவிந்துள்ள மண் மற்றும் இடிபாடுகளுக்கு இடையே மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், நேபாளத்தின் எல்லை அருகே சோசென் கோலா - புரேபு சாங்போ ஆறுகள் இணையுமிடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, இயற்கையான தடுப்பு ஏரி உருவாகியுள்ளது. இது உடைந்தால் 2ஆம் கட்ட வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US