வெளிநாட்டிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்: பெண் உட்பட இருவர் கைது
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் ஒன்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்
வியாழக்கிழமையன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த ஒருவரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவரது சூட்கேஸில் ஆறு பிளாஸ்டிக் கவர்களில் போதைப்பொருள் ஒன்றைக் கொண்டுவந்தது தெரியவந்தது. அதன் எடை 5.9 கிலோகிராம்.
அடுத்து மற்றொரு பெண் பயணியை சோதனையிட்டபோது அவரும் தன் சூட்கேஸில் போதைப்பொருள் ஒன்றைக் கொண்டுவந்தது தெரியவந்தது. அவரிடம் 6 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் இருந்தது.
அவர்கள் இருவருமே தாய்லாந்திலிருந்து சென்னை வந்திருந்தார்கள். அவர்கள் இருவரிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட கஞ்சா என்னும் போதைப்பொருளின் எடை மொத்தம் 11.9 கிலோ ஆகும்.
அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |