லண்டனில் ஈரானிய உளவுத் துறைக்கு உதவிய இருவர் கைது
2 Arrested in London Over Ties to Iran Iran's intelligence: ஈரானிய உளவுத் துறைக்கு உதவியதாக பிரித்தானியாவில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரானிய உளவுத் துறைக்கு உதவிய இருவர் கைது
ஈரானிய உளவுத்துறைக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டின் கீழ் லண்டனில் இரண்டு பேரை லண்டன் பெருநகர காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
தலைநகர் லண்டனில் நடத்தப்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 42 வயது பெண்ணும், 60 வயது ஆணும் லண்டனில் வெவ்வேறு முகவரியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் வெளிநாட்டு உளவுத்துறைக்கு உதவுவதை தடை செய்யும் 2023ம் ஆண்டின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 3-யின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லண்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இருவரும், அக்டோபர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படும் வரை தீவிரமான நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையால் சமூகத்திற்கு எந்தவொரு உடனடி அச்சுறுத்தல்களும் இல்லை என்று லண்டன் பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹெலன் ஃபிளானகன் உறுதிப்படுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |