கொழும்புவில் வெளிநாட்டு துப்பாக்கிகள், 100க்கும் அதிகமான தோட்டாக்களுடன் இருவர் கைது
வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இரண்டு பேர் கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள்
வெளிநாட்டு தயாரிப்பு ரிவோல்வர் துப்பாக்கிகளுடன் இருந்த இரண்டு மர்ம நபர்கள் கைது தெற்கு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு நேற்று கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மருதானை, பட்டியாவத்தை பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த அதிரடி நடவடிக்கையின் போது வெளிநாட்டு தயாரிப்பு ரிவோல்வர் துப்பாக்கிகளுடன் சேர்த்து 2 கிராம் 500 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இவர் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மற்றொரு சந்தேக நபர் கைது
கைது செய்யப்பட்ட நபர் மற்றொரு சந்தேக நபரிடம் துப்பாக்கி தோட்டாக்களை வழங்கியது குறித்து விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, இரண்டாவது நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து 9mm ரக 75 தோட்டாக்களும், T56 ரகத்தைச் சேர்ந்த 45 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இரண்டாவது நபரும் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூடுதல் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNELல் இணையுங்கள் |