அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி
வெனிசுலாவில் இருந்து செய்யப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
நெருக்கடியில் வெனிசுலாவின் எரிசக்தி துறை
உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களை கொண்டுள்ள வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க படைகளால் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
இதையடுத்து வெனிசுலாவின் எரிசக்தி துறை மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல், Kpler நிறுவன தரவுகளை சுட்டிக்காட்டி வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவின் சிறைப்பிடித்தல் நடவடிக்கைக்கு பிறகு வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சியடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
வெனிசுலாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சிறந்த மதிப்பு கொண்ட கச்சா எண்ணெய்கள் அமெரிக்காவிற்கு மாற்றி விடப்பட்டு இருப்பதாகவும் அல்லது உள்நாட்டு தேவைகளுக்காக சேமித்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள கச்சா எண்ணெய்
கிட்டத்தட்ட 4.8 கோடி பேரல் கச்சா எண்ணெய் கப்பல்கள் வெனிசுலா கடல் பிராந்தியத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த கப்பல்கள் சர்வதேச பொருளாதார தடைகளை மீறுவதாக கருதினால் அவை திருப்பி அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் நடவடிக்கை காரணமாக வெனிசுலாவுக்கு முக்கியமான வருவாய் ஆதாரமான ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக சீனாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
அத்துடன் வெனிசுலா கியூபா இடையிலான கச்சா எண்ணெய் வர்த்தகம் முற்றிலுமாக முடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNELல் இணையுங்கள் |