120 புலம்பெயர்வோருடன் மீண்டும் இங்கிலாந்தை வந்தடைந்த படகுகள்: கோபத்தில் மக்கள்
Two boats carrying up to 120 migrants have docked at a UK town: 120 புலம்பெயர்வோருடன் மீண்டும் இரண்டு படகுகள் பிரித்தானிய நகரம் ஒன்றை வந்தடைந்துள்ளன.
மீண்டும் இரண்டு புலம்பெயர்வோர் படகுகள் இங்கிலாந்து நகரமொன்றை வந்தடைந்ததால், அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
120 புலம்பெயர்வோருடன்...
நேற்று, ஞாயிற்றுக்கிழமை இரவு 10.15 மணியளவில், இங்கிலாந்தின் ஹாம்ப்ஷையரிலுள்ள Gosport என்னுமிடத்துக்கு இரண்டு படகுகள் வந்துள்ளன.

அந்த படகுகளில் சுமார் 120 புலம்பெயர்வோர் இருந்துள்ளார்கள்.
ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன், சுமார் 60 புலம்பெயர்வோருடன் படகொன்று Gosportக்கு வருவதாக தகவல் பரவ, அப்பகுதி மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
ஆனால், அந்த 60 புலம்பெயர்வோரும் டோவர் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
இந்நிலையில், நேற்றிரவு மீண்டும் 120 புலம்பெயர்வோருடன் இரண்டு படகுகள் வந்து சேர்ந்ததால், அப்பகுதி மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். ’

அவர்களை திருப்பி அனுப்புங்கள், உங்களுக்கு இங்கே வரவேற்பில்லை, நீங்கள் எங்களுக்கு வேண்டாம், உங்கள் நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள்’ என்றெல்லாம் கோஷமிட்டுள்ளார்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள்.
ஆனாலும், அங்கு குவிந்த பொலிசார் உதவியுடன், அவர்கள் பத்திரமாக கட்டிடம் ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.