டெக்சாஸில் அதிகரிக்கும் பதற்றம்! மற்றோரு பள்ளியில் துப்பாக்கிச்சூடு திட்டம்! 2 சிறுவர்கள் கைது..
டெக்சாஸில் வேறொரு பள்ளியில் ஏகே-47 துப்பாக்கிகளைக்க கொண்டு மற்றோரு படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டியதற்காக 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே 24-ஆம் திகதி, டெக்சாஸில் உவால்டே பகுதியில் உள்ள ராப் எலிமெண்டரி பள்ளியில், 18 வயதே ஆன சால்வடார் ராமோஸ் எனும் இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 11 வயதிற்கு உட்பட்ட 19 குழந்தைகள் மற்றும் 2 பெண் ஆசிரியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில்,நேற்று (மே 26-ஆம் திகதி) தெற்கு டெக்சாஸில் உள்ள ஒரு பள்ளியில் AK-47 துப்பாக்கிகளைக் கொண்டு படுகொலை செய்ய சதித்திட்டம் திட்டியதற்கான 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதில் இரண்டு பேர் 17 வயது சிறுவர்கள் ஆவர். நதானியேல் மாண்டேலாங்கோ (Nathaniel Montelongo) மற்றும் பார்பரிடோ பான்டோஜா (Barbarito Pantoja) என அறியப்படும் அவர்களது புகைடங்களை டோனா பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் இருவர் மீதும், பயங்கரமான ஆயுதம் மூலம் மோசமான தாக்குதலுக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் 750,000 அமெரிக்க டொலர்கள் பதிப்பிலான பாண்டு மூலம் ஜாமீன் பெறுவதில் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட நால்வரும் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தை எதிர்கொள்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரியோ கிராண்டே பள்ளத்தாக்கில் உள்ள ஒரு சிறிய சமூகமான டோனாவில் உள்ள பொலிசார், கைது செய்யப்பட்ட நான்கு பெரும் எந்த மாவட்ட பள்ளி வளாகத்தை குறிவைத்தனர் என்பதை வெளியிட மறுத்துவிட்டனர்.
இதனிடையே, சந்தேக நபர்களில் ஒருவரின் வீட்டில் AK-47 மற்றும் இலக்கு வைக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலையும் பொலிஸார் கண்டுபிடித்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.
அதேபோல், டெக்சாஸில் உவால்டே பகுதியில் உள்ள ராப் எலிமெண்டரி பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் மறுநாள் (புதன்கிழமை மே 25), டெக்ஸாஸின் ரிச்சர்ட்சன் பகுதியில் பெர்க்னர் உயர்நிலைப் பள்ளிக்கு துப்பாக்கியுடன் என்ற மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு, டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து மாணவர்கள் சிறார்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு வருவது அமெரிக்காவில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.


