லண்டன் சாலையில் இரட்டை கத்தி குத்து: பிரித்தானிய சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
பிரித்தானிய சாலையில் நேற்று இரவு நடந்த கத்தி குத்து சம்பவத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை கத்தி குத்து
டிசம்பர் 20 திகதியான நேற்று, இரவு 10.30 மணியளவில் லண்டனின் சீவர்ட் ஸ்ட்ரீட் EC1 பகுதியில் கத்தி குத்து சம்பவம் அரங்கேறியதாக வந்த புகாரை தொடர்ந்து, பொலிசார் அந்த பகுதிக்கு விரைந்தனர்.
அங்கு இரண்டு 16 வயது சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்டு கவலை கிடமான நிலையில் இருந்ததை அடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு அவசர சேவையின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Google Maps
ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான், அதே சமயம் மற்றொரு சிறுவன் மருத்துவமனைக்கு பத்திரமாக கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
லண்டன் சாலையில் சிறுவர்கள் இருவர் கத்தியால் குத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கத்தி குத்து சம்பவம் தொடர்பாக பொலிஸார் சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆதாரங்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
WALES NEWS SERVICE
மேலும் இந்த குற்ற சம்பவத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை வேகமாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.