லண்டன் சாலையில் கத்தியால் குத்தப்பட்ட இளம்பெண்: நாற்காலியை கொண்டு பாதுகாத்த பொதுமக்கள்
30 வயதுடைய பெண் ஒருவர் லண்டன் சாலையில் கத்தியால் குத்தப்பட்டார்.
நாற்காலி மற்றும் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு பாதுகாத்த பொதுமக்கள்.
பிரித்தானியாவில் இளம் பெண் ஒருவரை கத்தியால் குத்திய நபரை அருகில் இருந்த பொதுமக்கள் நாற்காலியை கொண்டு தாக்கி தடுத்து இருப்பது அரங்கேறியுள்ளது.
பிரித்தானியாவின் லண்டன் பகுதியில் Edgware Road சாலையில் உள்ள காபி ஷாப் ஒன்றில், 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரை மர்ம இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.
இதனை அருகில் இருந்து பார்த்த பொதுமக்கள் உடனடியாக அந்த இளைஞரிடம் இருந்து பெண்ணை பாதுகாக்க முயற்சித்தனர். மேலும் நாற்காலி மற்றும் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு பெண்ணை பாதுகாத்துள்ளனர்.
⛔️#Marylebone - #A5 Edgware Road is shut btwn Praed St and Harrow Road for a police incident - queues building up
— BBC Radio London Travel (@BBCTravelAlert) October 20, 2022
- buses 6, 7, 16, 23, 27, 36, 98 and 205 diverting pic.twitter.com/ACpyerYxV4
அத்துடன் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாளர்கள் தெரிவித்த தகவலில், பெண் தாக்கப்படும் காட்சியை கண்ட தொழிலாளர் குழு ஒன்று தங்கள் வாகனத்தில் இருந்து ஓடி வந்து கத்தியால் குத்தியவனை தடுக்கும் முயற்சியில் இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வாடகை வண்டி ஓட்டுநர் Des O'Halloran வெளியிட்டுள்ள ட்வீட்டில், எட்க்வேர் RD சாலையில் ஆண் ஒருவர் பெண்ணை சாலையில் அடித்ததை கண்டேன், அவள் நலமாக இருக்கிறாள் என்று நம்புகிறேன், மேலும் துணிச்சலானவர்கள் அவனை எதிர்த்து போராடி, அவளை பாதுகாப்பான இடத்திற்கு இழுத்து செல்வதை கண்டேன் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் உதவ முடியாத அளவிற்கு வெகு தொலைவில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
⚠️BREAKING⚠️
— VIDEO PRODUCTION NEWS - LONDON: (@VPNLDN) October 20, 2022
A women was stabbed on Edgware Road, members of the public detained a man at the scene, who was later arrested by police. It’s believed the man & victim where known to each other.
A female in her 30’s was treated for #STAB injuries & conveyed to hospital: #GORE pic.twitter.com/O1kN1Jh3Tf
தாக்குதல் சம்பவம் குறித்து பொலிசார் தெரிவித்துள்ள தகவலில், பெண் அவருக்கு தெரிந்த ஒருவரால் தாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு; பணவீக்கம் காரணமாக உணவை தவிர்க்கும் மக்கள்: பிரித்தானியாவில் அதிகரிக்கும் நெருக்கடி
மேலும் 30 வயதுடைய பெண், கத்தியால் குத்தப்பட்ட காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்துள்ளனர்.