சிறுவர்கள் இருவர் மீது துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு: அதிரவைத்துள்ள செய்தி
அமெரிக்காவில் 9 வயது சிறுவன் ஒருவன் மீதும், 10 வயது சிறுமி ஒருத்தி மீதும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
5 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்
கடந்த மாதம் 13ஆம் திகதி, அமெரிக்காவின் Ohio மாகாணத்திலுள்ள Cleveland நகரிலுள்ள தன் உறவினர் வீட்டுக்குச் சென்ற ஒரு சிறுமியை சில சிறுவர்கள் தாக்கியுள்ளனர்.
அவளுடைய தலைமுடி மொத்தமாக அவளது தலையிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்டுள்ளது. அவளுடைய தாய் அவளை மீண்டும் பார்க்கும்போது, மகளையே தாய்க்கு அடையாளம் தெரியவில்லையாம்.
கண்கள், உதடுகள் இரத்த நிறமாகி, உடல் முழுவதும் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளாள் அந்தச் சிறுமி.
அந்தச் சிறுமியைத் தாக்கிய 9 வயது சிறுவன் ஒருவன் மீதும், 10 வயது சிறுமி ஒருத்தி மீதும், கொலை முயற்சி, துஷ்பிரயோகம், தாக்குதல், கடத்தல் மற்றும் கழுத்தை நெறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இரு சிறுவர்கள் மீது இத்தகைய பயங்கர குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள விடயம் அமெரிக்காவில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |