குழந்தைகளை காணாமல் தேடிய தாய்..கிணற்றில் சடலமாக மிதந்த சோகம்
தமிழக மாவட்டம் நீலகிரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள், கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்
நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த தம்பதி சதீஷ்குமார், ஷாலினி. இவர்கள் நிதிஷ் (5), பிரணிதா (3) என்ற இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
கணவன், மனைவி இருவரும் விவசாயம் செய்து வரும் நிலையில், இன்று காலை விளையாடிக் கொண்டிருந்த இருவரும் காணாமல் போயுள்ளனர்.
இதனால் பதறிய தாய் ஷாலினி விவசாய நிலத்தில் தேடியுள்ளார். அப்போது சிறிய கிணற்றில் நிதிஷ், பிரணிதா தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
சடலங்கள் மீட்பு
பின்னர் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த பொலிஸார் உடனே அங்கு விரைந்து வந்து குழந்தைகளில் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிணற்றில் விழுந்து இரு குழந்தைகள் உயிரிழந்தது அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |