பிரித்தானியாவில் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட 2 குழந்தைகளின் உடல்கள்: 43 வயது பெண் கைது
பிரித்தானியாவில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில் 43 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 குழந்தைகள் உயிரிழப்பு
பிரித்தானியாவின் ஸ்டாஃபோர்ட்(Stafford) நகரில் உள்ள வீட்டில் இரண்டு குழந்தைகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து 43 வயதுடைய பெண் ஒருவர் கொலை குற்றச்சாட்டு சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவைகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான முதலுதவியை செய்ய முயற்சித்தனர்.
இருப்பினும் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இரண்டு குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்பாக தீவிரமான விசாரணை நடைபெற்று வருவதாக துப்பறியும் ஆய்வாளர் கிர்ஸ்டி ஓல்ட்ஃபீல்ட் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான ஊகங்களை பொதுமக்கள் செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |