இளைஞர்களின் Bank Account -ல் திடீரென Credit ஆன ரூ.2 கோடி! விரைந்து வந்த ED அதிகாரிகள்
3 இளைஞர்களின் வங்கிக்கணக்கில் திடீரென்று ரூ.2 கோடி கிரெடிட் செய்யப்பட்டதை அறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர்.
Credit ஆன ரூ.2 கோடி
தமிழக மாவட்டமான திருவள்ளூர், மாரரஜூப் பேட்டை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழரசன், பிரகாஷ், அரவிந்தன். இவர்களது வங்கிக்கணக்கிற்கு திடீரென 2 கோடி ரூபாய் கிரெடிட் ஆகியுள்ளது.
இதுகுறித்த தகவல் அமலாக்கத்துறைக்கு தெரியவந்ததால் டெல்லியில் இருந்து 10 -க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து மூன்று இளைஞர்களின் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர்.
அவர்களது வங்கிக்கணக்கிற்கு 2 கோடி ரூபாய் எப்படி வந்தது குறித்தும், யார் அனுப்பினார்கள் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இதில், ரூ.1.80 கோடி அளவுக்கு பணத்தை அந்த இளைஞர்கள் கூறப்படும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லியில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் பொலிஸார் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்று இளைஞர்களும் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது சம்பள பணத்தை அனுப்புவதற்காக வங்கிக்கணக்கு விவரங்களை கொடுத்துள்ளனர்.
மேலும், மூன்று இளைஞர்களின் வங்கிக்கணக்கிலும் கோடிக்கணக்கில் பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |