ரூ. 2 கோடி மதிப்புள்ள வைர முறுக்கு சங்கிலி, ஹை ஹீல்ஸ்! வித்தியாசமான தோற்றத்தில் ரன்வீர் சிங்
இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ், ஹை ஹீல்ஸ் அணிந்து தனது ஃபேஷன் ஆர்வத்தை நடிகர் ரன்வீர் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.
ரூ.2 கோடியில் வைர நெக்லஸ்
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங் பலரது கவனத்தை ஈர்ப்பதற்காக புதுமையான விடயங்களை செய்து வருவார்.
அதற்காக திடீரென்று அரை நிர்வாணத்தில் புகைப்படங்கள் பகிர்வது போன்றும், பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், உடைகளில் புது ஃபேஷனை முயற்சித்து பார்ப்பதில் ரன்வீர் சிங் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
அந்தவகையில் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நநிகழ்ச்சியில் அணிந்திருந்த வைர நெக்லஸ், ஹை ஹீல்ஸ் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
வெள்ளை நிற உடையில் வந்திருந்த நடிகர் ரன்வீர் சிங், ரூ.2 கோடி மதிப்புள்ள வைர முறுக்கு சங்கிலி அணிந்து வந்தது கவனத்தை ஈர்த்தது. அதோடு, உடைக்கு மேட்சாக ஷூ அணியாமல் ஹை ஹீல்ஸ் வெள்ளை நிற காலணி அணிந்து வந்திருந்தார்.
இவரது உடை மற்றும் அணிகலன்களை ரசிகர்கள் பலரும் ஒரு பக்கம் பாராட்டி வந்தாலும், மறு பக்கம் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |