பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
Philippines school gun shooting: பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் துப்பாக்கிக் கலாச்சாரம் மெல்ல பரவி வருகிறது.
இந்நிலையில், தெற்கு பிலிப்பைன்ஸிலுள்ள பள்ளி ஒன்றிற்குள் இன்று காலை இரண்டு துப்பாக்கிகளுடன் நுழைந்துள்ளார் மாணவர் ஒருவர்.
பள்ளியில் துப்பாக்கிச்சூடு
வகுப்பு ஒன்றில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஒரு ஆசிரியரை அவர் துப்பாக்கியால் சுட, குறி தப்பியதால் ஆசிரியர் உயிர் பிழைத்துள்ளார்.

உடனே மற்றொரு வகுப்புக்குச் சென்ற அந்த மாணவர், அங்கிருந்த ஒரு மாணவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தன்னைத்தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார்.
அவர்கள் இருவருமே பலியாகிவிட்டுள்ளார்கள். மேலும் இருவர் காயமடைந்துள்ளார்கள்.
தாக்குதலை தாக்குதல்தாரி இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக பள்ளியிலிருந்த மற்ற மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வீடொன்றிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு: குடும்பங்களின் இன்றைய நிலையைக் கூறும் ஒரு செய்தி
தாக்குதல்தாரி, உயிரிழந்த மாணவர், காயமடைந்தவர்கள் என யாருடைய பெயர் முதலான விவரங்களும் வெளியாகவில்லை.
விடயம் என்னவென்றால், ஜூன் மாதம், 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்கள், பிலிப்பைன்ஸ் பள்ளி ஒன்றில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டார்கள், சுமார் 20 மாணவர்கள் காயமடைந்தார்கள்.
அதைத்தொடர்ந்து, பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிசார் உறுதியளித்திருந்த நிலையில் இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |