இங்கிலாந்தில் சீக்கிய முதியவர்கள் மீது தாக்குதல், தலைப்பாகை பறிப்பு
இங்கிலாந்தில் சீக்கிய முதியவர்கள் இருவரை தாக்கியதுடன் அவர்களுடைய தலைப்பாகையையும் வலுக்கட்டாயமாக அகற்றிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சீக்கிய முதியவர்கள் மீது தாக்குதல்
கடந்த வெள்ளிக்கிழமையன்று இங்கிலாந்திலுள்ள Wolverhampton நகரில், இரண்டு சீக்கிய முதியவர்கள் தாக்கப்படும் காட்சிகள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது..
ஆகத்து மாதம் 15ஆம் திகதி, Wolverhampton ரயில் நிலையத்துக்கு வெளியே நடந்த இந்த தாக்குதல் இனவெறுப்பு சம்பவமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், சீக்கியர்களான முதியவர்கள் இருவர் தாக்கப்பட்டதுடன் அவர்களுடைய மதம் சார்ந்த அடையாளமான தலைப்பாகையும் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட விடயம் பிரித்தானியாவிலும் இந்தியாவிலும் வாழும் சீக்கிய அமைப்பினரிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
அந்த தாக்குதலுக்கு சீக்கிய அமைப்பின் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.
இதற்கிடையில், தாக்குதலில் ஈடுபட்ட 17, 19 மற்றும் 25 வயதுடைய மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |