பிரித்தானியாவில் 2 பெண் பொலிஸார் மீது தாக்குதல்: 23 வயது இளைஞர் கைது
பிரித்தானியாவில் 2 பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய நபர் மீது இரட்டை கொலை செய்ய முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் மீது தாக்குதல்
பிரித்தானியாவின் ஹார்லோவில்(Harlow) உள்ள ஹல் க்ரோவ் (Hull Grove)பகுதியில் மனிதர் ஒருவரின் நலனுக்காக மாலை 5.45 மணி அளவில் பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை எசெக்ஸ்(Essex) ஹார்லோ பகுதியில் இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகள் திடீரென தாக்கப்பட்டுள்ளனர்.
இதில் தலையில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு பொலிஸ் அதிகாரிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை.
இளைஞர் கைது
இந்நிலையில் பொலிஸ் அதிகாரிகள் மீது கொலைவெறி தாக்குதலை முன்னெடுத்த டெக்லான் டீட்ரிக்(Declan Diedrick, 23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது இரட்டை கொலை முயற்சி வழக்கு மற்றும் ஆயுதத்தை வைத்து இருந்தது ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெக்லான் டீட்ரிக் புத்தாண்டு தினத்தன்று கோல்செஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |