2024-ல் மூன்று கூடுதல் உளவு செயற்கைகோள்கள்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்
வட கொரியா அடுத்த ஆண்டு 3 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டு இருப்பதாக அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
தொடரும் மோதல் போக்கு
வட கொரியா, அமெரிக்கா மற்றும் தென் கொரியா இடையிலான புகைச்சல் நீண்ட நாட்களாக நிகழ்ந்து வருகிறது.
வட கொரியாவின் ஆயுத பரிசோதனையை அமெரிக்காவும், தென் கொரியாவும் தொடர்ந்து எரித்து வருகின்றனர்.
AP
அத்துடன் அவ்வப்போது வட கொரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
வட கொரியாவின் அடுத்த ஆண்டு இலக்கு
இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான இலக்குகளை திட்டமிடல் குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் வட கொரியாவின் தொழிலாளர் கட்சி சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்டு பேசிய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அடுத்த ஆண்டு(2024) மூன்று கூடுதல் உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ வட கொரியா திட்டமிட்டு இருப்பதாகவும், அணு ஆயுதங்கள் மற்றும் ஆளில்லா ராணுவ தளவாடங்களை கட்டமைக்கவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
AP
இது தொடர்பாக வட கொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்கா தலைமையிலான மோதல் போக்குகளை எதிர்கொள்ள முன்னரே தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |