பெருவெள்ளத்தில் சிக்கிய தோழியை மீட்க முயன்ற இளம்பெண்: நிகழ்ந்த துயரம்
A teenage girl desperately tries to hold on to her friend before both are swept to their deaths by a raging flood: பெருவெள்ளத்தில் சிக்கிய தன் தோழியை இளம்பெண்ணொருவர் மீட்க முயன்ற நிலையில், இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துவிட்டார்கள்.
பிரேசில் நாட்டில், தொடர்ந்து சில நாட்களாக மழை கொட்டித்தீர்த்த நிலையில், அதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளம்பெண்கள்
பல்கலையில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்த லாராவும் (Laura Raianny Pereira da Silva, 16), ரேய்னியும் (Rhaynny Rodrigues da Silva Barbosa, 19), ஞாயிற்றுக்கிழமை காலை வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது அவர்கள் இருவரும் பெருவெள்ளத்தில் சிக்கிக்கொள்ள, வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட இருந்த தன் தோழியை மீட்க முயன்றுள்ளார் அவர்களில் ஒருவர்.
ஆனால், வெள்ளத்தின் வேகத்தை சமாளிக்க முடியாமல் அவரும் வெள்ளத்துக்குள் விழுந்துவிட்டிருக்கிறார்.
சோகம் என்னவென்றால், இந்தக் காட்சிகளை சிலர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்களே ஒழிய, அவர்களை யாரும் காப்பாற்ற முயலவில்லையாம்.

அத்துடன், சிலர் அவர்களை கேலி செய்து சிரித்ததாகவும், அந்த சத்தம் அந்த வீடியோக்களில் பதிவாகியுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரேய்னி ஓரிடத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அதிகாலை மணி 6.20க்கு அவரது உயிர் பிரிந்துள்ளது.
லாரா சுமார் 1.2 மைல் தூரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், காலை 9.40 மணியளவில், பாறைகளுக்கிடையே அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!