நடுவானில் மோதிக்கொண்ட இரண்டு ஹெலிகாப்டர்கள்: பிரித்தானிய மாணவர் உட்பட 3 பேர் பலி
அமெரிக்காவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்
அமெரிக்காவின் வடமேற்கு ஓரிகான் மாகாணத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியுள்ளன.
விமான நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஹெலிகாப்டர்கள் விபத்து சம்பவத்தில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட இந்த விபத்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.15 மணிக்கு நிகழ்ந்துள்ளது.

இந்த தகவலை யாம்ஹில் கவுண்டி ஷெரீப் சாம் எலியட் உறுதிப்படுத்தியுள்ளதாக CNN செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விபத்துக்கான காரணத்தை கண்டறிய தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகம் ஆகிய அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் விவரம்

இந்த விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்களில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
முதல் ஹெலிகாப்டரில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த விமான பயிற்றுவிப்பாளரும், அவருடன் பயிற்சி செய்த பிரித்தானிய மாணவர் ஒருவரும் இருந்துள்ளனர்.
இரண்டாவது ஹெலிகாப்டரில் ஓரிகான் மாகாணத்தை சேர்ந்த தனி விமானி ஒருவர் பயணித்துள்ளார்.