பிரித்தானியாவில் மோசடி வழக்கில் 2 இந்திய இளைஞர்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு
பிரித்தானியாவில் Scotland பகுதியில் மோசடி வழக்கில் 2 இந்திய வாலிபர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
South Lanarkshireல் இருந்து ஸ்காட்டிஷ் மில்லியனர் ஒருவரை ஏமாற்றியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இரண்டு தெலுங்கு இளைஞர்களும் அடங்குவர்.
இவர்களில் ஒருவர் ஹைதராபாத் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், பிரதிவாதிகள் பாதிக்கப்பட்ட வயதானவரை ஏமாற்றி 1 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் திருடியதாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட உமர் முகமது மற்றும் சுனில் டைத் உட்பட 6 ஆண்கள் மற்றும் 34 வயது பெண் டிசம்பர் 14 அன்று கைது செய்யப்பட்டனர்.
Police Scotland, police in Essex, London மற்றும் Eastbourneல் உள்ள பொலிஸார் மற்றும் National Crime Agency ஆகியவற்றின் கூட்டு விசாரணையைத் தொடர்ந்து மோசடி கும்பல் கண்டுபிடிக்கப்பட்டது.
லண்டனில் உள்ள ஈஸ்ட்போர்ன், ஸ்டான்ஸ்டெட், டேகன்ஹாம் மற்றும் ஈஸ்ட் ஹாம் ஆகிய இடங்களில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை நடந்து வருவதால் கும்பலின் செயல் முறை இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. சில இந்திய மாணவர்கள் இந்தியா திரும்புவதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் தங்கள் வங்கிக் கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்கியதால் மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
தியாட் மற்றும் முஹம்மது இருவரும் பிரித்தானிய தெலுங்கு சமூகத்தில் நன்கு அறியப்பட்ட நபர்கள். சவுத் லனார்க்ஷயரில் முதியவர் ஒருவரை ஏமாற்றி பெரும் தொகையை கொள்ளையடித்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஸ்காட்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
UK News, Indian Origin in UK, Scotland, Hyderabad