UAE உட்பட 6 அரபு நாடுகளுக்கு Visa-Free Entryயை அனுமதித்துள்ள பிரித்தானியா
United Arab Emirates உட்பட பல அரபு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா இல்லாமல் நுழைய (Visa-Free Entry) பிரித்தானியா (United Kingdom) அனுமதிக்கிறது.
பிரித்தானிய அரசாங்கம் வரும் பிப்ரவரி 22 முதல், அனைத்து வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள் மற்றும் Jordon-ல் வசிப்பவர்களுக்கு இந்த வசதியை அமுல்படுத்துகிறது.
Saudi Arabia, United Arab Emirates, Kuwait, Oman, Jordan மற்றும் Bahrain ஆகிய ஆறு நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு பிரித்தானியாவிற்குள் நுழைவதற்கு விசா தேவையில்லை.
அதற்குப் பதிலாக, பிப்ரவரி முதல் பிரித்தானியாவிற்குள் நுழைவதற்கு அவர்கள் மின்னணு பயண அங்கீகாரம் (Electronic Travel Authorisation-ETA) பெற்றிருக்க வேண்டும்.
ஏற்கெனெவே, பிரித்தானியா செல்லும் கத்தார் குடியிருப்பாளர்கள் நவம்பர் 15, 2023 முதல் இந்த மின்னணு பயண அங்கீகாரத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பதைக் குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் பொருந்தும் என்று பிரித்தானிய அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ETA அமைப்பை நோக்கிய இந்த நகர்வு, நுழைவுச் செயல்முறையை எளிதாக்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், Visit Visaவைப் பெறுவதற்கான அவசியத்தை நீக்குவதாகவும் பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது.
பயணிகள் இந்த Electronic Travel Authorisationஐ 10 GBP செலவில் மின்னணு முறையில் விண்ணப்பிக்க வேண்டும், பின்னர் அது அவர்களின் பயண நோக்கங்களுக்காக இரண்டு வருட காலத்திற்கு வழங்கப்படும் என் அதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், எல்லைப் பாதுகாப்பையும் வாடிக்கையாளர் அனுபவத்தையும் மேலும் மேம்படுத்தும் வகையில், 2025ஆம் ஆண்டுக்குள் பிரித்தானிய எல்லையை டிஜிட்டல் மயமாக்குவதன் ஒரு பகுதியாக, புதிய ETA திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டங்களை அரசாங்கம் அறிவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
IMMIGRATION, GCC COUNTRIES, BRITISH VISA, ONLINE VISA, United Arab Emirates, Visa-Free Entry, United Kingdom, Saudi Arabia, Kuwait, Oman, Jordan, Bahrain, Electronic Travel Authorisation, UK Visa