2023ல் முகேஷ் அம்பானியை விட ரூ.5000 கோடி அதிகம் சம்பாதித்த Hcl Shiv Nadar., இந்தியாவில் முதலிடம்
2023-ஆம் ஆண்டு முடியப் போகிறது. இந்த ஆண்டு வருமானத்தில் இந்தியாவில் அதிகம் பணம் சம்பாதித்தவர் யார் தெரியுமா?
Bloomberg Billionaires Index படி, நாட்டின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான Reliance Industries தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 9.23 Billion Dollar (இலங்கை பணமதிப்பில் ரூ. 2,99,521 கோடி) அதிகரித்துள்ளது.
அவர் 96.3 பில்லியன் டொலர் மதிப்புள்ள மொத்த சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்களின் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார்.
ஆனால் இந்த ஆண்டு முகேஷ் அம்பானியை விட HCL நிறுவனர் Shiv Nadar அதிக வருவாயை ஈட்டியுள்ளார். இந்த ஆண்டு ஷிவ் நாடார் சொத்து மதிப்பு 9.39 Billion Dollar (இலங்கை பணமதிப்பில் ரூ. 3,04,713 கோடி) அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு அதிகம் சம்பாதித்ததன் அடிப்படையில், இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடத்தில் உள்ளார்.
Bloomberg Billionaires Index-ன் படி, அவரது சொத்து மதிப்பு இந்த ஆண்டு $9.39 பில்லியன் அதிகரித்து $33.9 பில்லியனை எட்டியுள்ளது. HCLல் 61% பங்குகளை வைத்துள்ளார். இந்த ஆண்டு HCL நிறுவனத்தின் பங்குகள் 45 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு அதிக வருவாய் ஈட்டிய டாப் 5 இந்தியர்கள்
1- ஷிவ் நாடார்- 9.39 பில்லியன் டொலர்கள்
2- முகேஷ் அம்பானி - 9.23 பில்லியன் டொலர்கள்
3- OP Jindal குழுமத்தின் தலைவர் Savitri Jindal - 8.98 பில்லியன் டொலர்கள்
4- DLF-ன் Kushal Pal Singh- 7.77 பில்லியன் டொலர்கள்
5- Shapoor Mistry - 7.49 பில்லியன் டொலர்கள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
HCL Shiv Nadar, Shiv Nadar net worth, Indian Businessman Shiv Nadar, Mukesh Ambani, Bloomberg Billionaires Index, Indian Billionaires