2023 கடைசி வர்த்தக நாளில் Gautam Adaniக்கு அடித்த ஜாக்பாட்., சொத்து மதிப்பில் ரூ.35,630 கோடி உயர்வு
இந்த ஆண்டின் கடைசி வர்த்தக நாளில் கோடீஸ்வர தொழிலதிபர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.35,630 கோடி உயர்ந்துள்ளது.
2023-ஆம் ஆண்டின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29), உலகம் முழுவதும் உள்ள பெரும் பணக்காரர்களின் நிகர மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்திய பங்குச் சந்தையும் சரிவுடன் முடிந்தது.
ஆனால் இந்த வீழ்ச்சியில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானிக்கு பெரும் லாபம் கிடைத்தது.
சொத்து மதிப்பில் ரூ.35,630 கோடி உயர்வு
அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட பத்தில் ஒன்பது நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் மூடப்பட்டன மற்றும் அதானியின் சொத்து மதிப்பு 1.10 பில்லியன் டொலர் (இந்திய ரூ.9,157.4 கோடி) அதிகரித்துள்ளது. அதாவது இலங்கை பணமதிப்பில் ரூ.35,630 கோடி ஆகும்.
Bloomberg Billionaires Indexன்படி, ஆண்டின் கடைசி வர்த்தக நாளில் உலகில் அதிக வருமானம் ஈட்டிய பணக்காரர் அதானி தான். இதன் மூலம் அவரது சொத்து மதிப்பு 84.3 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. இப்போது அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடத்தில் உள்ளார்.
வெள்ளிக்கிழமை, அதானி குழுமத்தின் பத்தில் ஒன்பது நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன
Adani Green Energy மற்றும் Adani Energy Solutions பங்குகள் இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாகவும், Adani Enterprises, ACC மற்றும் Ambuja Cements பங்குகள் ஒரு சதவீதத்திற்கும் அதிகமாகவும் உயர்ந்தன. இதன் காரணமாக, அதானியின் சொத்து மதிப்பு அதிகரித்தது.
இருப்பினும், இந்த ஆண்டு அதிக சொத்து மதிப்பை இழந்த நபரும் இவர்தான். இந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு 36.2 பில்லியன் டொலர் குறைந்துள்ளது. அந்த வகையில், Bloomberg Billionaires Index பட்டியலில் இருக்கும் முதல் 20 பணக்காரர்களில் சொத்து மதிப்பை இழந்த ஒரே நபர் அதானி மட்டுமே.
ஜனவரி 24 அன்று, Hindenburg Research அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் கணிசமாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Gautam Adani net worth 2023, Gautam Adani net worth, Adani Groups, Bloomberg Billionaires Index, US Dollars