ஒன்றும் செய்யாமலே இவருக்கு ரூ.32,000 கோடி தரும் Microsoft., யார் இந்த Steve Ballmer
உலகின் IT ஜாம்பவானான Microsoft ஸ்டீவ் பால்மருக்கு (Steve Ballmer) பல ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப் போகிறது.
உலகின் மிகப்பாரிய ஐடி நிறுவனமான மைக்ரோசாப்டின் நிதிச் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த முன்னேற்றத்திற்குப் பிறகு, நிறுவனம் ஒரு பாரிய முடிவை எடுத்துள்ளது.
இப்போது மைக்ரோசாப்ட் ஒரு பங்குக்கு 75 சதவீத ஈவுத்தொகையை (Dividend) ஒரு காலாண்டிற்கு வழங்கப் போகிறது. இது ஒரு பங்குக்கு 3 US Dollar வீதம் ஆண்டுதோறும் வழங்கப்படும்.
அத்தகைய சூழ்நிலையில், ஸ்டீவ் பால்மருக்கு சுமார் ஒரு பில்லியன் டொலர்கள், அதாவது ரூ.8313 கோடி ஈவுத்தொகை கிடைக்கும். இது இலங்கை பணமதிப்பில் ரூ.32,391 கோடி ஆகும்.
Forbes அறிக்கையின்படி, Steve Ballmer உலகின் 10வது பாரிய பணக்காரர். 2000 முதல் 2014 வரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். தற்போது ஸ்டீவ் பால்மருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பங்களிப்பு இல்லை.
ஸ்டீவ் பால்மர் 1980-ல் ஸ்டான்போர்டின் எம்பிஏ படிப்பை விட்டு வெளியேறிய பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாளராக சேர்ந்தார். முதல் டாட்-காம் செயலிழந்த பிறகு பால்மர் மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரியானார் மற்றும் 2014-ல் மைக்ரோசாப்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதற்குப் பிறகு அவர் NBA-ன் Los Angeles Clippers அணியை 2 பில்லியன் டொலருக்கு வாங்கினார்.
ஸ்டீவ் பால்மருக்கு கோடிக்கணக்கான பங்குகள் உள்ளன
முன்னாள் மைக்ரோசாப்ட் சிஇஓ ஸ்டீவ் பால்மருக்கு 333.2 Billion Dollar மதிப்புள்ள Microsoft Shares உள்ளன. இது நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளுக்கு சமம்.
ஸ்டீவ் பால்மர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு முதல் முறையாக தனது பங்குகளை வெளியிட்டார். 4 சதவீத பங்குகள் இருப்பதால், அவருக்கு 1 பில்லியன் டொலர் ஈவுத்தொகை கிடைக்கும்.
இந்த ஈவுத்தொகை எப்போது வழங்கப்படும்?
ஸ்டீவ் பால்மர் இந்த ஈவுத்தொகையைப் பெற மைக்ரோசாப்ட் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறார். வாரியம் எந்த வெட்டுக்களையும் செய்யவில்லை என்றால், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியின் போர்ட்ஃபோலியோவில் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள டிவிடெண்ட் சேர்க்கப்படும்.
இதனுடன், பால்மர் 20 சதவீதம் என்ற விகிதத்தில் 200 மில்லியன் டொலர் வரியும் செலுத்த வேண்டும். 2003 முதல், மைக்ரோசாப்டின் டிவிடெண்ட் தொகையில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பால்மரின் மொத்த சொத்து எவ்வளவு?
Bloomberg Billionaires Indexன்படி பால்மர் குழுமத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் பால்மரின் சொத்து மதிப்பு நவம்பர் 2023 நிலவரப்படி 122 Billion Dollars ஆகும்.
Bloomberg Billionaires Indexன் இன்றைய (Dec29) நிலவரப்படி, அவர் உலகின் 5-வது பாரிய பணக்காரர் ஆவார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 1980-ல் ஸ்டீவ் பால்மரை பணியமர்த்தினார். பின்னர், இந்திய வம்சாவளியினரான சத்யா நாதெல்லா (Satya Nadella) 2014-ல் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Microsoft Steve Ballmer, steve ballmer dividend income, Steve Ballmer Microsoft CEO, Billionaire, Salary without any work