எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும் போது 2 இந்தியர்கள் உயிரிழப்பு
எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும் போது 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
எவரெஸ்ட்டில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
நேபாளத்தில் அமைந்துள்ள உலகின் உயரமான சிகரமான எவெரெஸ்ட் சிகரம், பிரபல சுற்றுலாத்தளமாக உள்ளது.
சமீபத்தில் 3 இந்தியர்கள் அடங்கிய 274 பேர் கொண்ட மலையேறும் குழு ஒன்று நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் உச்சிக்கு சென்று, ஒரே நாளில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச மலையேற்றம் என்ற சாதனையை படைத்தது.

மேலும், இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் படையை (ITBP) சேர்ந்த 14 பெண்கள் அடங்கிய குழு வெற்றிகரமாக எவரெஸ்ட் உச்சியை அடைந்தது. 
இந்நிலையில், மலையேற்றத்திற்கு சென்ற 2 இந்தியர்கள் மலையில் இருந்து இறங்கும் போது உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருண் குமார் திவாரி மற்றும் சந்தீப் அரே ஆகிய இருவரும் கீழே இறங்கும் போது கடும் சோர்வு அடைந்துள்ளனர். வழிகாட்டிகள் பாதுகாப்பாக கீழிறக்க முயற்சிகள் மேற்கொண்ட போதும் பலனளிக்கவில்லை.

ஒருவர் அபாயகரமான ஹிலாரி ஸ்டெப் பகுதிக்கு அருகே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் கேம்ப் II-ல் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம், இந்த பருவத்தில் எவரெஸ்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக நேபாளத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |