புலம்பெயர்வோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: இந்தியக் குடும்பத்துக்கு நேர்ந்துள்ள துயரம்
புலம்பெயர்வோரை ஏற்றிச் சென்ற படகொன்று அமெரிக்கக் கடற்கரை ஒன்றின் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள். இரண்டு இந்தியக் குழந்தைகள் உட்பட ஏழு பேரைக் காணவில்லை.
புலம்பெயர்வோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து
இன்று அதிகாலை அமெரிக்காவின் San Diego நகருக்கருகிலுள்ள கடற்கரை ஒன்றின் அருகே படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
படகில் பயணித்த ஒன்பது பேரைக் காணவில்லை என தெரிவித்த அவர்கள், பின்னர் இரண்டு பேர் கரை சேர்ந்ததாகவும், அவர்கள் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் என சந்தேகிக்கப்படுவதால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியக் குடும்பத்துக்கு நேர்ந்துள்ள துயரம்
இந்நிலையில், அந்த படகில் ஒரு இந்தியக் குடும்பமும் பயணித்தது தெரியவந்துள்ளது. காணாமல் போன ஏழு பேரில், அந்த இந்தியக் குடும்பத்தின் இரண்டு பிள்ளைகளும் அடங்குவர் என சான் ஃப்ரான்சிஸ்கோவிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
We are very sad to know about the tragic incident of a boat capsizing near Torrey Pines State Beach, off the coast near San Diego, California, this morning. As per available information, three people died, nine went missing, and four were injured in the incident. An Indian…
— India in SF (@CGISFO) May 5, 2025
அந்த பிள்ளைகளின் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அந்த படகு எங்கிருந்து வந்தது என்பது என்பது தெரியவில்லை என்றும் கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுடைய பெயர், புகைப்படங்கள் முதலான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |