வெளிநாட்டில் ஒரு கணவருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழும் 2 இந்திய இளம்பெண்கள்! காதல் வந்தது எப்படி? தலைசுற்றவைக்கும் ஆச்சரிய சம்பவம்
அமெரிக்காவில் கணவனை விவாகரத்து செய்த இந்திய இளம்பெண் தனது தோழியின் கணவர் மீது காதல் கொண்ட நிலையில் மூவரும் சேர்ந்து ஒரே வீட்டில் 10 வருடமாக மகிழ்ச்சியுடன் வசித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Piddu Kaur (31) என்ற பெண்ணுக்கும், நபர் ஒருவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே மனக்கசப்பு ஏற்பட்டு Piddu Kaur கணவரை விவாகரத்து செய்தார்.
பின்னர் தனது பள்ளிகால நண்பர்களான Speetie Sing (36) மற்றும் அவர் மனைவி Sunny-ஐ Piddu சந்தித்துள்ளார். தங்கள் வீட்டில் வந்து ஒருவாரம் தங்கும்படி தம்பதி Piddu-யிடம் கூற அவரும் வந்து தங்கினார்.
அப்போது Speetieக்கும் Pidduக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில் ஒருவரும் ஒன்றாக இணைந்துள்ளனர்.
இதன்பின்னர் நடந்த சம்பவம் தான் ஆச்சரியம்! அதாவது Speetie,Sunny மற்றும் Piddu உடன் சேர்ந்து ஒன்றாக வாழ முடிவு செய்தார்.
இதற்கு இரண்டு பெண்களும் சம்மதித்தனர்.
தற்போது 10 ஆண்டுகளாக மூவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
Speetie - Sunny தம்பதிக்கு இரண்டு பிள்ளைகளும், Speetie - Piddu தம்பதிக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இவர்கள் மூவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இவர்கள் வழக்கத்திற்கு மாறான காதலை கொண்டுள்ளதால் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் அவர்களுடன் சரியாக பேசவில்லை என தெரிகிறது.
மூவரும் ஒருவருக்கொருவர் எந்தவொரு ஒளிவு மறைவும் இன்றி வாழுவதால் தங்களுக்குள் பொறாமை மற்றும் பிரச்சினைகள் ஏற்படவில்லை என கூறுகின்றனர்.

