இத்தாலியில் சீக்கியர் கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு: கொலை செய்யப்பட்ட 2 இந்தியர்கள்
இத்தாலியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு இந்தியர்கள் உயிரிழப்பு
இத்தாலியின் பெர்காமோ மாகாணத்தில் உள்ள கோவோ(Covo) நகரில் வெள்ளிக்கிழமை இரவு 12 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சீக்கியர்கள் புனித வழிபாட்டுத் தலமான குர்த்வாரா மாதா சாஹிப் கவுர் ஜி அருகே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீக்கியர்களின் பண்டிகையான வைசாகி (Vaisakhi festival) கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்த ரகிந்தர் சிங்(48) மற்றும் குர்மித் சிங்(48) ஆகிய இரண்டு பேர் கொல்லப்பட்டு இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தப்பியோடிய குற்றவாளிகள்
குற்றவாளிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அங்கிருந்து 10 காலி தோட்டாக்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்த கொலை சம்பவத்தை திட்டமிட்ட படுகொலை என்ற பிரிவில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |